Published : 11 Jun 2016 11:55 AM
Last Updated : 11 Jun 2016 11:55 AM
ஷங்கர் ராமசுப்ரமணியன் எழுதிய, ‘முடங்கும் பதிப்புத் தொழிலும் செல்லரிபடும் நூலகங்களும்’ கட்டுரை படித்தபோது, டால்ஸ்டாயின் ‘வார் அண்ட் பீஸ்’ நாவல் ஞாபகத்துக்கு வருகிறது. அந்நாவல், லட்சக்கணக்கான பிரதிகளைத் தாண்டி இன்னமும் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது.
தமிழ் நூல்கள் அத்தகைய விற்பனையை எட்ட அரசை எதிர்பார்த்து இருக்க முடியாது. நூல் வாசிப்பென்பதே வேலையில்லாத பொழுதுபோக்கென்ற சித்தாந்தம் உலவி வரும் மாநிலம் நம்முடையது.
சினிமா பார்ப்பதுபோல், கோயிலுக்குப் போவதுபோல் மாதம் ஒரு புத்தகம் என்று ஒவ்வொரு குடும்பமும் வாங்கினால் நம்மை உயிரோடு வைத்திருக்கும் புத்தகங்கள் உயிர் தரிக்கும்.
- பி.சந்தானகிருஷ்ணன், தஞ்சை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT