Published : 21 Jun 2016 10:33 AM
Last Updated : 21 Jun 2016 10:33 AM
பல திரைப்படங்களின் வக்கிரக் காட்சிகளைப் பார்க்கும்போது திரைப்படங்கள் உண்மையிலேயே தணிக்கை செய்யப்பட்டுதான் வெளியாகின்றவா என்ற கேள்வி எழுகிறது. படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் அவற்றை நாம் ஊக்கப்படுத்திவிடக் கூடாது.
தொலைக்காட்சியில் ஆண் - பெண் உறவுகளைக் கொச்சைப்படுத்தும் தொடர்கள், நகைச்சுவை என்ற பெயரில் மட்டமான துணுக்குத் தோரணங்கள், மாந்திரீகம், பில்லி - சூனியம் போன்ற மூடநம்பிக்கைக் காட்சிகள் வருகின்றன.
பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை வீட்டின் வரவேற்பறையில் கூச்சமில்லாமல் பார்க்க நாம் பழகிவிட்டோம்.
எனவே, தணிக்கைச் சட்டங்களை இன்னும் கடுமையாக்குவதோடு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT