Published : 14 Jun 2016 10:45 AM
Last Updated : 14 Jun 2016 10:45 AM

குழந்தைத் திருமணங்கள்: மாற்றம் சாத்தியமா?

குழந்தைத் திருமணங்களைப் பற்றிப் பேசிய >“அடுத்த தலைமுறையைச் சூனியமாக்கும் குழந்தைத் திருமணங்கள்” கட்டுரை அதிர்ச்சியான புள்ளிவிவரங்களோடு அதன் பின்னுள்ள காரணங்களையும் பட்டியலிட்டது.

குழந்தைத் திருமணங்கள் எவ்விதத் தடையும் இல்லாமல் பெருமளவில் நடப்பதற்கு, சமூக விழிப்புணர்வு குறைவு என்பதைக் கடந்து, சட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதையே காட்டுகிறது. தடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் குழந்தைத் திருமணங்களில், 90% அதிகமான திருமணங்கள் நடந்தேறியுள்ளன.

சில அசாதாரண சூழல்களைத் தவிர்த்து, நடந்து முடிந்த திருமணங்கள் செல்லாதவை என்றறிவிக்க இயலாது. பெரும்பாலான குழந்தைத் திருமணங்கள் கோயில்களில் நிகழ்கின்றன. அதில் முறைகள் வகுக்கப்பட வேண்டும். திருமணம் செய்பவர்களின் பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்க வேண்டும்.

கோயில் திருமணங்களில் வாய்வழி தகவல்கள் ஏற்கப்படக் கூடாது. மக்கள் பிரதிநிதிகளும் இவ்வகைத் திருமணங்களுக்குத் துணைபோவது வேதனையான செய்தி. இப்படியானவர்களும் தண்டிக்கும் நிலை வந்தால் மட்டுமே மாற்றம் சாத்தியம்.

- வ.சி.வளவன்,குழந்தை நலச் செயல்பாட்டாளர், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x