Published : 19 Jul 2016 02:15 PM
Last Updated : 19 Jul 2016 02:15 PM
உடுமலை அருகே போலீஸாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தலித் மக்களுக்கு முடிதிருத்தம் செய்ய தீர்வு எட்டப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 27 கி.மீ., தொலைவில் வீதம்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. லிங்கம்மாபட்டி, பொம்மநாயக்கன்பட்டி, வரதராஜபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில், சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 27 கி.மீ., தொலைவில் வீதம்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது.
லிங்கம்மாபட்டி, பொம்மநாயக்கன்பட்டி, வரதராஜபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில், சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
பல ஆண்டுகளாக, அங்குள்ள சலூன் கடைகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு முடிதிருத்தம் செய்யப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், 7 கி.மீ. தொலைவில் உள்ள நெகமம் அல்லது வேலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று முடிதிருத்தம் செய்துகொள்வதாக தலித் மக்கள் தெரிவித்தனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி, கிராம மக்கள் சிலர் நேற்று முன்தினம் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "புகார் எழுந்துள்ள கிராமத்தில் விசாரணை நடைபெற்றது. சலூன் கடைக்காரர்கள் வரவழைக்கப்பட்டு, கிராம நிர்வாக அதிகாரியின் முன்னிலையில், கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பாரபட்சமற்ற முறையில் முடிதிருத்தம் மற்றும் அதுதொடர்பான சேவைகள் செய்யப்படும் என உறுதிமொழி எழுதி பெறப்பட்டுள்ளது" என்றனர்.
ஊராட்சிமன்றத் தலைவர் எம்.மனோகரன் கூறும்போது, "சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே பிரச்சினை நிலவியது. பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்பட்டது. தற்போது, மீண்டும் புகார் எழுந்தது. போலீஸாரின் தலையீட்டுக்குப் பிறகு, சுமூகமாக தீர்வு ஏற்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT