Published : 03 Aug 2016 05:20 PM
Last Updated : 03 Aug 2016 05:20 PM
ரஜினியின் கபாலி படம் பற்றி, அவரின் நட்சத்திர அந்தஸ்தோடு இணைத்துப் பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளன. ஆனால், ஒரு சராசரி இந்தியனின் சமூகப் பொருளாதார வாழ்நிலையிலிருந்து, படத்தையும் படத்தைச் சுற்றியுள்ள அரசியல் பொருளாதாரத்தை அணுகுகிறது > ‘கபாலியும் காலி வத்திப்பெட்டியும்' கட்டுரை.
தமிழ்ப் படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைப்பதற்கே வரிச் சலுகை என்பது விசித்திரமானது; வினோதமானது. ஒவ்வொரு ஆண்டும் இப்படி கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
அரசின் வருமானத்துக்கு வழிதேடுவதில் இருவகை உள்ளது. ஒன்று, விற்பனை மற்றும் சேவை வரியாக மக்கள் தலையில் சுமத்துவது. மற்றொன்று, உயர் வருவாய் பிரிவினரைத் தேர்வுசெய்து, அவர்களுடைய வருமானத்தின் மீதும் ஆடம்பரச் செலவுகள் மீதும் வரி விதிப்பது.
உலகமயமாக்கலால் வருவாய் ஏற்றத்தாழ்வுகள் மிகப் பெரும் அளவு வளர்ந்து வருவது கண்டு, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளே அஞ்சுகின்றன.
எனவேதான், அந்நாட்டுப் பொருளியல் அறிஞர்கள் அதிகரித்து வரும் மூலதனக் குவிப்பின் மீது வளர்வீத வரி விதிக்க வேண்டுமெனப் பரிந்துரை செய்கின்றனர். அப்படியிருக்க கேளிக்கை, களியாட்டங்களுக்கு அற்ப காரணங்களைத் தேடி வரிச் சலுகை அளிப்பதென்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று.
- பேரா. நா.மணி,ஈரோடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT