Published : 25 Jul 2016 01:04 PM
Last Updated : 25 Jul 2016 01:04 PM

தமிழ்ப் பற்றாளனின் கேள்வி

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில், இன்று தமிழ் மொழிக்கு நேர்ந்த கொடுமையை எண்ணிப்பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், புதுக்கோட்டை நகராட்சி வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில், தமிழில் வாதாடியதால் அந்த மனுவையே தள்ளுபடி செய்த செய்தி அதிர்ச்சியானது.

இந்திய நாடாளுமன்றத்தில்கூட, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழில் உரையாற்ற முடிகிறது. ஆனால், மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழறிந்த மனுதாரரின் மனு, மொழி காரணமாகத் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை ஏற்க இயலவில்லை. இந்த நடைமுறைகளைச் சீர்செய்ய மத்திய - மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன?

- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x