Published : 21 Jun 2016 10:39 AM
Last Updated : 21 Jun 2016 10:39 AM

லேசான மனது உறக்கத்தின் வாசல்

>தூக்கம் வராமல் புரளுகிறீர்களா? என்கிற கட்டுரையின் கேள்விக்குப் பெரும்பான்மையானவர்களின் பதில் ‘ஆம்’ என்பதாகவே இருக்கும்.

தூக்கம் பிரச்சினையல்ல; பிரச்சினைதான் தூக்கமின்மைக்குக் காரணம். நடந்த சம்பவங்கள் மீதான தொடர் சிந்தனையே பலரது தூக்கத்தைக் கெடுக்கும் காரணி. ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்ற மனோபாவம் மனதை லேசாக்கும்.

லேசான மனது தூக்கத்தைக் கைப்பிடித்து நம்மிடம் அழைத்து வரும். குடும்பத்தினர் அனைவரும் இரவில் ஒன்றாக உணவருந்துவதும், தூங்கச் செல்லும் முன் கலகலப்பாகப் பேசி மகிழ்வதும் உறக்கத்தை அள்ளித் தரும். உடலுக்கு வேலை தருபவர்கள் உற்சாகமாக உறங்குவதையும் நாம் கவனிக்கத் தவறக் கூடாது.

- கூத்தப்பாடி மா.கோவிந்தசாமி, தருமபுரி.

***

நல்ல முயற்சி

>பத்து இயக்குநர், பத்து பார்வைகளின் தொகுப்பு அருமை. ‘ஒரு ரசிகனை தியேட்டருக்கு இழுத்துவருவது நடிகன் என்றால், அவரை தியேட்டரில் அமர வைப்பது இயக்குநரின் திறமை’ என்பார் பி.வாசு. இலக்கியங்கள், நாடகங்கள் திரைப்படமான காலகட்டத்துக்கு அடுத்து, உண்மைச் சம்பவங்கள் படமாகின. பின் கிராமத்திலிருந்து வந்த இயக்குநர்கள் மண் சார்ந்த அழகியலைப் படம்பிடித்தனர்.

பிறகு, மேலைநாட்டுத் தாக்கத்தால் அதன் பாதிப்பில் படமாகின. புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’, கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ முதல் சமீபத்திய சந்திரகுமாரின் ‘லாக்கப்’ வரை திரைப்படமாகி வெற்றி பெற்றிருப்பது படைப்பாளிகளோடு படிப்பாளிகள் இணைந்ததன் முயற்சி.

- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x