Published : 19 Jul 2016 12:50 PM
Last Updated : 19 Jul 2016 12:50 PM

அறம்சார் கடமை

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருக்கும் இலங்கை அகதி தயாபர ராஜை மண்டபம் முகாமுக்கு மாற்றவும், மனைவி, குழந்தைகளுடன் அவர் தங்கியிருக்க அனுமதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்ட செய்தி மகிழ்ச்சி தருகிறது. அகதிகளாக வருபவர்கள், பலவித சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்குப் பிறகாவது, மனிதாபிமானத்தோடு நடத்தப்படுகிறார்களா என்றால், இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

தஞ்சம் தேடி வந்தவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதே, அறம்சார் கடமை. அதைச் செய்யத் தவறிய நாம், 20 ஆண்டுகளாக அவர்கள் தங்கியிருந்தபோதிலும் ஒருவருக்குக்கூட இன்னும் குடியுரிமை கொடுக்கவில்லை என்பது வேதனையின் உச்சம். குடியுரிமை கொடுக்கப்பட்டால்தான் எளிதில் வேலை கிடைக்கும்; வெளி நாடுகளுக்குச் செல்ல முடியும் என்பதை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் தேவை.

- தா.சாமுவேல் லாரன்ஸ், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x