Published : 04 Jan 2016 12:00 PM
Last Updated : 04 Jan 2016 12:00 PM

புதிய புயல்!

நடிகர் சூர்யா, ‘தி இந்து’, ‘புதிய தலைமுறை’ இணைந்து நடத்திய ‘யாதும் ஊரே’ கருத்தரங்கு பற்றிய செய்திகளும், படங்களும் நன்று. தமிழகத்தில் ஒரு பெரிய புயல் மையம் கொண்டுள்ளது. அது எதை யெல்லாம் புரட்டிப் போடப்போகிறதோ தெரியவில்லை இளைஞர்கள் பொறுப்பை எடுத்துக்கொண்டு விட்டார்கள். பெரியவர்கள் ஆசி வழங்க வேண்டிய தருணம் இது.

- ஜெ.சாந்தமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் (ஓய்வு), மன்னார்குடி.

***

‘யாதும் ஊரே’ விழாவில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். ‘மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் சாதிக்க முடியும்’ என்ற நீதியரசரின் நேர்மறையான எண்ணம், ‘நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தன்னாட்சி அமைப்பு’ என்ற யோசனை,

‘தமிழகத்தில் நீர்நிலைகளைப் பாதுகாப்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்’ என்ற ஆவல்,

‘பருவநிலை மாற்றத்தோடு இணைந்து ஆராய வேண்டும்’ என்ற அறிவியல் பார்வை, ‘தவறுகளைத் திருத்திக்கொள்ள இதுவே சரியான தருணம், ‘பேரிடர் மேலாண்மைத் திட்டம் தேவை’ என்ற எதிர்காலத்திற்கான தேடல் போன்ற விலைமதிப்பற்ற கருத்துகளை முன்வைத்த இந்த நிகழ்வு நிச்சயமாகத் தமிழக வரலாற்றில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்த நிகழ்வை முன்னெடுத்த ‘அகரம் அறக்கட்டளை’, ‘தி இந்து’ குழுமம், மற்றும் ‘புதிய தலைமுறை’ இவர்களுடன் இன்னும் நிறைய கரங்கள் இணையும், அதன் பலன் நிச்சயம் ஒரு பெரிய சாதனையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள்!

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x