Published : 17 Jun 2016 10:46 AM
Last Updated : 17 Jun 2016 10:46 AM

தி இந்துவின் மகத்தான பங்கு

நமது 'தி இந்து' தமிழ் நாளிதழ் ஆரம்பித்ததிலிருந்தே தினமும் வாசகர்களுக்குத் திருவிழாதான். தேர்தல் அறிவிப்பு வந்ததும் 'ஜனநாயகத் திருவிழா', சென்னை புத்தகக்காட்சி ஆரம்பித்ததும் >'வாசகர் திருவிழா' என்று பணி தொடர்கிறது.

ஒவ்வொரு நாளும் புத்தகக்காட்சி நேரில் பார்ப்பது போன்ற உணர்வினை எங்களைப் போன்ற வெளியூர் வாசகர்களுக்கு 'வாசகர் திருவிழா' ஏற்படுத்தியது. நிறைகளை மட்டுமல்லாது, சிறுசிறு குறைகளையும் வாசகர்கள் மூலம் சுட்டிக்காட்டியது, பின்வரும் நாட்களில் இந்த மாதிரி புத்தகக்காட்சிகள் திறம்படச் செயல்பட ஏதுவாக அமையும்.

- அ.பட்டவராயன்,திருச்செந்தூர்.

*

பாராட்டும் நன்றியும்!

சென்னை புத்தகக்காட்சிக்குச் சென்றதும் தேர்ந்த புத்தகங்களை வாங்கத் தூண்டியது 'தி இந்து'வின் கட்டுரைகளே. அன்றாடம் வெளிவந்த சிறந்த புத்தகங்கள் பற்றிய குறிப்புகள், புத்தகங்களைத் தேர்வுசெய்யப் பெரிதும் உதவின. புத்தகம் வாங்கும் ஆர்வத்தையும் அதன் பயன்பாட்டு விழிப்புணர்வையும் ஏற்படுத்திய 'தி இந்து' நாளிதழுக்குப் பாராட்டுகள்.

- கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.

*

வாசிப்பின் அரசியல்

சென்னை புத்தகத் திருவிழா தொடர்பான கட்டுரைகளை 'தி இந்து'வில் தொடர்ந்து படித்தேன். குறிப்பாக, மருதனின் 'வாசிப்பின் அரசியல்'கட்டுரை. புத்தகங்களை வாசிப்பது மிகவும் அவசியம். ஒரு தரப்பு மட்டுமின்றி எதிர்த்தரப்பு முகாமிலிருந்து வெளிவரும் நூல் களையும் வாசிக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் தனக்கான ஒரு கொள்கையை.. ஒரு கோட்பாட்டை உருவாக்கிக்கொண்டு அதிலிருந்து சமரசம் செய்துகொள்ளக் கூடாது. மருதனின் 'வாசிப்பின் அரசியல்' குறித் தும் விமர்சிக்கலாம். அதை வாசித்து விட்டு விமர்சிப்பதே ஆரோக்கியமானது.

பொன்.குமார்,சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x