Published : 08 Jul 2016 02:54 PM
Last Updated : 08 Jul 2016 02:54 PM

தொடரட்டும் எழுத்துப் பணி

பெருமாள்முருகனின் நாவலுக்குத் தடையில்லை என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

எதற்கெடுத்தாலும் எழுத்தாளர்களுக்கு எதிராகப் போராடுபவர்கள், இனி அதற்குத் தயங்குவார்கள் என்ற நம்பிக்கையைத் தருகிறது இத்தீர்ப்பு. பெருமாள்முருகன் தமது எழுத்துப் பணியைத் தொடர வேண்டும்.

- செம்பியன், 'தி இந்து' இணையதளம் வழியாக...

*

'பஞ்சாயத்து' தீருமா?

கடந்த 25 ஆண்டுகளில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தால் கிராமங்களில் சாலை, குடிநீர், தெருவிளக்கு அடிப்படைத் தேவைகள் ஓரளவாவது வளர்ச்சியை எட்டியிருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி கள், கட்சி அரசியல் சார்ந்து தங்களது பணியைச் செய்துவருவதுதான் வீண் பஞ்சாயத்தை ஏற்படுத்துகிறது. சிலர் தனக்கு வாக்களிக்கவில்லை என்ற ரீதியில் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எந்தவொரு பணியையும் செய்வதில்லை.

அதேபோல, தனக்கு வாக்களித்த மக்களை மட்டும் இனம் கண்டு கொண்டு அவர்களுக்கு மட்டும் நலத் திட்ட உதவிகளைச் செய்வது ஜனநாயக விரோதம். பஞ்சாயத்து ராஜ் பணிகள் சிறக்க வேண்டு மென்றால், இதுபோன்ற குறைகள் களையப்பட வேண்டும்.

- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x