Published : 30 Jun 2016 10:44 AM
Last Updated : 30 Jun 2016 10:44 AM

தமிழ் மெல்ல இனி வாழும்!

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பு சார்பில் நடத்திய முப்பெரும் விழா குறித்த பதிவுகளை ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் படித்தபோது, தமிழ் மெல்ல இனி வாழும் என்ற நம்பிக்கை பிறந்தது.

சங்கத் தமிழ், செம்மொழி அந்தஸ்தைப் பெற்றாலும் அதன் சிறப்பை, தொன்மையை உலகமே அறிய வித்திட்ட நிகழ்வில், பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் அனைவருமே தங்கள் கருத்துகளை மிகச் சிறப்பாகப் பதிவுசெய்திருந்தார்கள். விஜய் ஜானகி ராமன், திருஞான சம்பந்தம் ஆகிய இரு தமிழர்கள் விதைத்துள்ள விதை விருட்சமானால், தமிழன்னைக்கு உரிய இருக்கை கிடைக்கும்!

- கு.மா.பா.கபிலன், சென்னை.



*

தொடரும் பாராட்டும்

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கடவுளின் நாக்கு’ கட்டுரை வண்ணப் படத்துடன் மிகச் சிறப்பாக உள்ளது. ‘வீடில்லா புத்தகங்க’ளைப் போல இத்தொடரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

- செ.இலக்குவன், புதுச்சேரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x