Published : 16 Jun 2016 10:47 AM
Last Updated : 16 Jun 2016 10:47 AM
நூலகப் பிரச்சினைகளை விவரித்துள்ள ஷங்கர் ராமசுப்ரமணியனின் கட்டுரை நன்று. நூலகத் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளிக் கல்வித் துறையினின்றே இயக்குநர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
ஒரு முறை நூல்கள் தேர்வுக் குழுவில் இருந்தபோது, அதன் தலைவராகிய பள்ளிக் கல்வி இயக்குநரைப் பார்த்து, “சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகம் எது?” என்று கேட்டதற்கு “புத்தகங்கள் படித்து 20 வருடங்களுக்கு மேலாயிற்று. எங்கே நேரம் இருக்கின்றது” என்றார்.
ஆங்கில நூல்களுக்கு மட்டும் நூல் பதிப்பாளர் குறிப்பிட்டுள்ள விலை தரப்படும். தமிழ் நூல்களுக்கு 16 பக்கத்துக்கு இவ்வளவு என்று விலை நிர்ணயிக்கப்படும். நூலின் தன்மை, நூலாசிரியரது பெருமை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT