Published : 21 Jul 2016 05:43 PM
Last Updated : 21 Jul 2016 05:43 PM

அவசியமான பணி

மாவட்டம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருப்பதைப் படித்ததும் மனம் மகிழ்ந்தது.

நீராதாரங்களைத் தமிழகம் முழுவதும் உள்ள இந்த வகை மரங்கள் உறிஞ்சி தமிழகத்தைப் பாலைவனமாக்கி விளை நிலங்களையும் நாசம்செய்கின்றன.

எல்லா மாவட்ட ஆட்சியர்களும் இதைப் பின்பற்ற ஆவன செய்தால், அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவார்கள். இந்த விஷயத்தில் அரசும் துணை நிற்க வேண்டும்.

- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).

*

அதிசய உணவுகள்

இந்த வாரம் சனிக்கிழமை சமையலில், எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம் பரிமாறிய தாய்வான் உணவான ‘ஜியோசி’ வகை நொறுக்குத் தீனிகளின் சுவை வித்தியாசமாக இருந்தது. ‘டோஃபு’ என்பது சோயாவிலிருந்து தயாரிக்கும் புரதச்சத்து நிறைந்த உணவு என்பார்கள். சுவைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

- தி.மணிமேகலை, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x