Published : 18 Oct 2014 10:05 AM
Last Updated : 18 Oct 2014 10:05 AM
‘மெல்லத் தமிழன் இனி...!’ கட்டுரைத் தொடர் மதுவின் கோரப்பிடியில் சிக்கித் தவிப்போர்க்கான எச்சரிக்கை மணி. மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற குரல் அண்மைக் காலமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தத் தருணத்தில், கட்டுரை வந்திருப்பது மேலும் வலுவூட்டுவதாக இருக்கிறது.
மது மனிதனோடு வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது. வலி நிவாரணியாகத் தொடங்கி, மகிழ்ச்சிக்கும் சோகத்துக்குமான பானமாக மாறிய மது, இன்று போதைப் பொருளாக உருவெடுத்து, உயிரைக் குடிக்கும் உயிர்க்கொல்லியாக மாறிவிட்டது.
இளைஞர்களிடம் ஆரம்பிக்கிற இந்தப் பழக்கம், கொஞ்சம் கொஞ்சமாக போதைக்கு அடிமையாகி, பாதை மாறி பயணத்தைத் தொடங்கி எதிர்காலத்தை இழக்கின்ற போக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பள்ளிகளை ஊருக்கு வெளியே வைத்துவிட்டு மதுக் கடைகளை ஊருக்குள் வைக்கிற நிலைமை மாற வேண்டும். குடிநீர், சுகாதாரம், சாலை வசதி போன்றவற்றுக்காக வீதிக்கு வந்த மக்கள், இன்று மதுக் கடைகளை மூடச்சொல்லிப் போராடவும் வீதிக்கு வந்துவிட்டார்கள். கேரள அரசு முனைந்திருப்பதைப் போல நாமும் பூரண மதுவிலக்கைக் கொண்டுவருவோம். மதுவின் பிடியில் இருந்து மனித சமுதாயத்தை மீட்டெடுப்போம்.
- மு.க. இப்ராஹிம்,வேம்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT