Published : 15 Jun 2016 10:49 AM
Last Updated : 15 Jun 2016 10:49 AM
படிப்பாளிகளை உருவாக்கும் நூலகங்களும், படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பதிப்புத் தொழிலும் கடந்த 40 ஆண்டுகளாக நலிந்துவருவதற்கான முக்கியமான காரணங்களை விளக்கிய 'முடங்கும் பதிப்புத் தொழிலும் செல்லரிபடும் நூலகங்களும்' கட்டுரை படித்தேன். அரசியல் பின்னணி இல்லாத அறிஞர்கள், கல்வியாளர்கள், நல்லாசிரியர்கள், சமூக அக்கறை கொண்ட எழுத்தாளர்கள் அடங்கிய நூலக ஆணைக் குழுவை உருவாக்கி, அந்தக் குழு பரிந்துரை செய்யும் தரமான நூல்களை மட்டுமே நூலகங்களுக்கு வாங்க வேண்டும்.
நூலகங்களில் தரமான புதிய நூல்கள் வரவு வைக்கப்பட்டால் மட்டுமே வளர்ந்துவரும் அறிவியல் மற்றும் அனைத்துத் துறைகளின் புதிய மாற்றங்கள் மாணவர்களைச் சென்றடைய முடியும். இனிவரும் காலங்களில் நல்ல மாற்றத்தை உருவாக்குவதோடு, சிதிலமடைந்துவிட்ட நூலகங்களும், பதிப்புத் தொழிலும் புதிய பாதையில் அடியெடுத்து வைக்கும் நடவடிக்கைகளை, அரசு உடனே எடுக்க வேண்டும்.
- கு.மா.பா.கபிலன், சென்னை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT