Published : 09 Jun 2016 10:38 AM
Last Updated : 09 Jun 2016 10:38 AM

பாதிக்காத விளையாட்டு!

நீதிபதி கே.சந்துரு எழுதிய, ‘நீதித் துறையிலும் தொடரும் எண் விளையாட்டு’ கட்டுரை படித்தேன். மூடநம்பிக்கைகளைத் தகர்க்க வேண்டிய இடத்தில் இருக்கும் நீதிபதிகளுக்கிடையே இத்தனை மூடநம்பிக்கைகளா என்று பிரமித்துப்போனேன். தங்களின் எண் விளையாட்டு மற்றவர்களைப் பாதிக்கக் கூடாது என்ற சுயகட்டுப்பாட்டையாவது அவர்கள் வகுத்துக்கொள்ள வேண்டும்.

- ரவி, ‘தி இந்து’ இணையதளம் வழியாக.



மதம் கடந்த விசாரணை தேவை

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் - ஒழுங்கு கேள்விக் குறியாகிவிட்ட நிலையில், மதுராவில் போஸ் சேனா அமைப்பினர் நடத்திய கலவரம் அதை மேலும் மோசமாக்கியிருக்கிறது. இவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியது யார் என்பது போன்ற விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அமைதி காத்துவருகிறது. விசாரணை மந்தகதியில் நடக்கக் காரணம், இந்த இயக்கம் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களால் இயக்கப்படுவதே ஆகும். ஆயுதம் தாங்கிய போராட்டத்தை யார் நடத்தி னாலும், அது முளையிலேயே அழித் தொழிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

- அ.அப்துல் ரஹீம், காரைக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x