Published : 03 Jun 2016 11:26 AM
Last Updated : 03 Jun 2016 11:26 AM
வெள்ள சேதத்திலிருந்து மீண்டு எழுந்திருக்கும் சென்னை, புத்தகத் திருவிழாவால் மேலும் புத்துணர்ச்சி பெறுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் 39-வது புத்தகத் திருவிழாவை நடத்திக்கொண்டிருக்கிறது. அரங்குகளின் வரிசை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்சிகளைத் தொலைக்காட்சி மூலமும் இணையதளங்கள் மூலமும் நேரடியாக ஒளிபரப்பு செய்தால், வெளியூர் இலக்கிய அன்பர்களுக்கு உதவியாக இருக்கும்.
சென்று பார்த்துவிட்டு வரும் நிகழ்வாக அமையாமல், எழுத்தாளர்களை வாசகர்கள் சந்திக்கும் இனிய அனுபவமாகவும் அமையக்கூடும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்தப் புத்தகத் திருவிழாவில் அதிகமாய்ப் பங்கேற்க கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும். தமிழகத்தின் அனைத்துக் கல்லூரி நூலகங்களும் அதிகமான நூல்களை வாங்கிப் பதிப்பாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். சமைப்பதற்கு, துயில்வதற்கு, உண்பதற்கு என வீட்டில் தனித்தனியாக அறை இருப்பதைப் போல் நூல்களைப் பயில்வதற்கும் ஓர் அழகான அறை ஒதுக்கப்பட வேண்டும். வீடே நூலகமானால் அறிவை விரிவுசெய்து அகண்ட பார்வையால் அனைவரையும் ஒன்றாகக் கருதும் ஒப்பிலா உயர் சமுதாயம் விரைவில் உருவாகும்!
- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT