Published : 28 Jun 2016 12:44 PM
Last Updated : 28 Jun 2016 12:44 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் ‘விலக வேண்டும்’ என்று வாக்களித்தவர்களில் 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் என்றும், ‘தொடர வேண்டும்’ என்று வாக்களித்தவர்களில் இளைய தலைமுறையினரே அதிகம் என்றும் தெரியவந்துள்ளது.
அதாவது, பெரியவர்கள் வேலை உத்தரவாதம் பற்றிய கவலை காரணமாகவும், இளைஞர்கள் எதிர்கால வேலைவாய்ப்பு பற்றிய சிந்தனையிலும் வாக்களித்திருப்பதாகத் தெரிகிறது.
புதிய அரசு இனி என்ன செய்ய வேண்டும் என்பதே இன்றைய முக்கிய கேள்வி. சிலவற்றை அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
இன்றைய நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதே சிறந்தது. இந்த விஷயத்தில் இந்தியர்களைச் சிந்திக்க வைக்கிற ஒரு செய்தியும் இருக்கிறது.
இங்கிலாந்தின் சட்ட வரைவைப் பயன்படுத்துகிற இந்திய அரசு, ஏன் இங்கிலாந்தைப் போல மக்கள் கருத்தை ஏற்று நடக்கக் கூடாது? மக்கள் கருத்துக்கு மதிப்பளித்துப் பதவி விலகக்கூடிய தலைவர்கள் இங்கேயும் உருவானால் நன்றாக இருக்குமே?
- வெ.ரா.ஆனந்த், மின்னஞ்சல் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT