Published : 08 Jun 2016 11:11 AM
Last Updated : 08 Jun 2016 11:11 AM

சமூகம் முன்னேற..

'இடஒதுக்கீடு கோரும் குரல்கள்' கட்டுரையைப் படித்தேன். தெளிந்த நீரோடையைப் போன்ற செறிவான கருத்துகள். இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்ற குடும்பங்களே மீண்டும் மீண்டும் உடனடியாகப் பெறுகிற நிலை இல்லாமல் இன்னும் ஒருமுறைகூட இடஒதுக்கீட்டு உரிமையை அனுபவிக்காத குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். உரிமைகள் பரவலாக இதுவே வழி.

- கி.நாவுக்கரசன், ராணிப்பேட்டை.



வளர்ச்சி தொடரட்டும்!

‘வளர்ச்சி வேகம் தொடரட்டும்’ என்ற தலையங்கம் படித்தேன். இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் வறட்சி மட்டும் ஏற்படாமலிருந்தால் வளர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கும். போதாததற்கு உலகப்பொருளாதார வீழ்ச்சியினால் நமது ஏற்றுமதி பாதியாகியுள்ளது. அரசின் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கினால் இன்னும் வேகமான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.

-மணி, ‘தி இந்து’ இணையதளம் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x