Published : 05 Aug 2016 04:04 PM
Last Updated : 05 Aug 2016 04:04 PM
இயக்குநர் மகேந்திரனுடனான, >'மக்களிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்ற நேர்காணல் ஒரு திரைச் சித்திரம் போலிருந்தது.
திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தாலும், அதன் மூலம் மனித மனத்தில் இழையோடும், நுண்ணிய உணர்வுகளையும் படமாக்க இயலும் என்பதை யதார்த்தமாகத் தன், 'முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள்' போன்ற படங்கள் மூலம் சித்தரித்தவர் மகேந்திரன்.
"மக்களின் கண்கொண்டு பார்த்தாலே அழகுணர்ச்சி பிடிபடும்" என்பது போன்ற அவரது சொல்லாடல்கள், கலைக் கண்களுக்கு மட்டுமே புலப்படும் என்பது திண்ணம்.
பாடல்கள் விஷயத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதைச் சூசகமாகச் சுட்டிக்காட்டியபோதிலும், இளையராஜாவைப் பாராட்டியிருந்தது, ஒரு தேர்ந்த கலைஞனின் முதிர்ச்சியைக் காட்டியது.
"செயற்கைத்தனம் என்பது என் திரைப்படத்தில் மட்டுமல்ல, எனது பேச்சிலும் இல்லை" என்பதை நேர்காணல் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் மகேந்திரன்.
- அ.மயில்சாமி, கோவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT