Published : 08 Jun 2016 11:10 AM
Last Updated : 08 Jun 2016 11:10 AM
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 14 பேர் மருத்துவர்களாகப் பணியாற்றுகிறார்கள் என்ற செய்தியினைப் படித்தபோது மிகவும் மகிழ்ந்தேன். ஏனெனில் அரசுப் பள்ளிகளைவிட குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் சில தனியார் பள்ளிகள் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளின் புகைப்படத்தினைச் செய்தித்தாள்கள் மற்றும் டிஜிட்டல் போர்டில் விளம்பரம் செய்து தங்கள் மாணவர் சேர்க்கையை அதிகரித்துக் கொள்கின்றன. எந்த விளம்பரமும், வசதியும் இல்லாமல் சாதித்துள்ள இதுபோன்ற அரசுப் பள்ளிகள் அதிகம் தமிழகத்தில் உருவாக வேண்டும்.
எம். ஆர். லட்சுமிநாராயணன், ராசிபுரம்.
கேட்கப்படாத குரல்
கல்வியைக் கையில் வைத்திருக்க வேண்டிய அரசு அதைக் கை கழுவிவிட்டது. அரசு பள்ளிகள் அனாதைகளாக மாறிவிட்டன. ஆசிரியர்களும் அக்கறையற்றவர்களாக உள்ளனர். பெற்றோர்களும் பிள்ளைகள் மதிப்பெண் பெற வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளனர். பிள்ளைகளை மதிப்பெண் பெற வைப்பதற்காகத் தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் பெற்றோர்களிடம் அளவற்ற கட்டணம் கட்டாய வசூல் செய்யப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் கட்டணக் கொள்ளைக்கு எதிராகக் குரல் எழுகிறது. ஆனாலும் அரசு கண்டு கொள்வதேயில்லை. இந்த ஆண்டாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்.குமார், சேலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT