Published : 01 Jun 2016 10:55 AM
Last Updated : 01 Jun 2016 10:55 AM

போலி ஓட்டுநர் உரிமம்

இந்தியா முழுவதும் வழங்கப் பட்டுள்ள ஓட்டுநர் உரிமங்களில் மூன்றில் ஒரு பகுதி உரிமங்கள் போலியானது என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது. போலிதான் பல்வேறு முறைகேடுகளுக்கு முக்கியக் காரணமாகிறது. எனவே, 1988-ல் உருவான மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர, மத்திய அரசு முடிவெடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத் தக்கதாகும். மத்திய அமைச்சரவைக் குழுவின் பரிந்துரைப்படி போலி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10000- அபராதம் விதிக்கப்படும் எனும் சட்டம் விரைவில் கொண்டுவரப்பட வேண்டும்.

- கு.மா.பா.கபிலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x