Published : 11 Jun 2016 11:58 AM
Last Updated : 11 Jun 2016 11:58 AM

குறுநில மன்னர் முறை

‘அதிமுக வெற்றியின் பின்னுள்ள இழைகள்’ தலையங்கம் எதிர்க்கட்சிகளை சிந்திக்கத் தூண்டும். தனது கட்சி தோல்வியடைந்த இடங்களில் அதற்கான காரணங்களை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறது அதிமுக. ஆனால், பிரதான கட்சியான திமுகவோ மோடி வாழ்த்து கூறியதால்தான், ‘அதிமுக வென்றது.. திமுக தோற்றது’ என்று தன்னைதானே தேற்றிக்கொள்கிறது.

தலைமை முதல் கீழ்மட்டம் வரை புரையோடியிருக்கும் குறுநில மன்னர் முறையே திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்பதை திமுக தலைமை இன்னும் உணரவில்லை. கருணாநிதி தனது கட்சிக்கு அறுவைச் சிகிச்சை செய்யப் போகிறாரா அல்லது வழக்கம்போல முதலுதவி சிகிச்சை செய்யப் போகிறாரா?

- ஜே.ராஜகோபாலன், நெய்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x