Published : 20 Jan 2016 10:55 AM
Last Updated : 20 Jan 2016 10:55 AM
நாமக்கல் சென்று ‘சிங்கத் திருவடியைச் சேவிக்கும் சிறிய திருவடி’ ஆஞ்சநேயரைத் தரிசித்துவிட்டு, கோயம்புத்தூரிலிருந்து 27 கி.மீ. தொலைவிலுள்ள காரமடை ஸ்ரீரங்கநாதரின் அருள் பெற்று, அப்படியே பொடிநடையாக நடந்து இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜப் பெருமாளிடம் வரம் யாசித்து, பின் சிறுவந்தாட்டில் அருள்பாலிக்கும் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாளை மனம் குளிரக் கண்டு களித்து, டிராட்ஸ்கி மருதுவின் கோரிப்பாளையம், சீனு ராமசாமியின் டி.கல்லுப்பட்டி, தமிழச்சி தங்கபாண்டியனின் மல்லாங்கிணறு (இக்கிராமத்தின் அரசு உயர்நிலைப் பள்ளியில் நான் ஓராண்டு தலைமை ஆசிரியராகப் பணியாற்றியதாக நினைவு), மாஃபா பாண்டியராஜனின் விளாம்பட்டி, வி.தேவதாசனின் கீழத்திருப்பாலக்குடி போன்ற கிராமங்களுக்குச் சென்று, அங்கு சீரும் சிறப்புமாக நடந்த பொங்கல் விழாக்களில் கலந்துகொண்டு, பின் மதுரை திருமலை நாயக்கர் மஹால், புதுக்கோட்டை, பத்மநாபபுரம், திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர் போன்ற இடங்களில் உள்ள அரண்மனைகளில் உலவிவிட்டு என்று ஒரே நாளில் இத்தனையையும் கண்டுகளிக்க முடியுமா என்றால், முடியும் ‘தி இந்து’ பொங்கல் மலர் வழியாக.
பொங்கல் மலர் அருமையாக, அற்புதமாக, வழுவழுப்பான தாளில் கண்ணைக் கவரும் வவண்ணப் படங்களில் அசத்தியிருக்கிறீர்கள்.. பாராட்டுகள்!
- ஆ. நெல்லைநாயகம்,திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT