Published : 14 Jun 2016 10:41 AM
Last Updated : 14 Jun 2016 10:41 AM
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பதினோராம் வகுப்பில் சிறந்த தனியார் பள்ளிகளில் சேர அரசு சார்பில் உதவித்தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம்?
பலரும் அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் எனக் கூறும் சமயத்திலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் சமயத்திலும், இந்த அறிவிப்பு எதிர்வினைகளையே உண்டுபண்ணும். அரசே தனியார் பள்ளியில் படிக்க ஊக்குவிப்பது மிகவும் தவறான ஒன்றாகும்!
- செ.நிர்மலா, தர்மபுரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT