Published : 06 Jul 2016 04:46 PM
Last Updated : 06 Jul 2016 04:46 PM
ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச் சாவடியின் உபயோகிப்பாளர் கட்டணம் உயர்ந்துள்ளது என்பதை 'தி இந்து' தமிழ் நாளிதழ் வழியாக அறிந்தோம்.
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலானவை நான்கு அல்லது ஆறு வழிச் சாலைகளாக மாற்றப்பட்டு, கணிசமான அளவுக்குச் சுங்கம் வசூலிக்கப்பட்டுவருகிறது. ஆனால், சாலைகளின் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படவில்லை.
சாலை ஓரங்களில் தமது வாகனங்களை நிறுத்தி பலர் ஓய்வெடுப்பதையும், உணவருந்துவதையும் அன்றாடம் நாம் காண்கிறோம். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
பயணிகளின் வசதிக்காக 30 கி.மீ. இடைவெளியில் ஓய்வெடுக்கும் இடங்களை அமைத்துக்கொடுத்தால் விபத்துகளைத் தடுக்க உதவும். பயணிகளுக்கான வசதிகளைச் செய்துகொடுக்க முடியாத பட்சத்தில், உபயோகிப்பாளர் கட்டணத்தைப் பாதியாகக் குறைப்பதே நல்லது.
- கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT