Published : 25 Jul 2016 01:07 PM
Last Updated : 25 Jul 2016 01:07 PM
பல வாசகர்கள் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்த கேள்விகளை அ.முத்துலிங்கத்திடம் சுருக்கமாகவும் சுருக்கென்றும் கேட்டிருக்கிறார் அரவிந்தன். வெளிப்படைத் தன்மையில்லாத விருதுகள் குறித்துப் பல கேள்விகள் எழுகின்றன.
ஒரே ஒரு புதினம் எழுதி தமிழின் மிக உயர்ந்த விருதுகளைப் பெற்றுவிட முடிகிற நிலையும், மறுபக்கம் அரை நூற்றாண்டுக்கு மேலாக எழுதிய மூத்த எழுத்தாளர்களைக் கண்டுகொள்ளாத நிலையும் இருக்கிறது.
ஒவ்வொரு படைப்பாளிக்கும் அந்தந்த ஆண்டு விருது வழங்கப்படும்போது, யார் யார் பெயர்கள் அவ்வமயம் கருத்தில்கொள்ளப்பட்டன, அவர்களின் படைப்புகள் மீது என்ன விமர்சனங்கள் வைக்கப்பட்டன, விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம் போன்றவற்றையும் வெளிப்படையாக அறிவித்தால் சிறப்பாக இருக்கும்.
அதேபோல, மூத்த எழுத்தாளர்களின் உடல்நலம் ஆய்ந்து, தேவைப்படின் அவர்களின் எழுத்தறைக்கே சென்று விருதைக் கொடுக்கலாம். தர வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும்!
- பேராசிரியர் சௌந்திரமகாதேவன், திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT