Published : 12 Jan 2017 10:16 AM
Last Updated : 12 Jan 2017 10:16 AM

இப்படிக்கு இவர்கள்: மனதைப் பாதித்த கட்டுரை

வி.தேவதாசன் எழுதிய, ‘கருகிய பயிர்கள் அதிகரிக்கும் உயிரிழப்புகள்’கட்டுரை மனதைப் பாதித்துவிட்டது (ஜன.10). முருகையன், பாலு ஆகியோரின் இறப்பு நடந்த சூழல் துயரமானது. இதற்குக் காரணம், காவிரி நீர் கிடைக்காததுதான். இதுவரையில் 177 விவசாயிகள் இறந்துள்ளதாகச் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. மத்திய அரசுப் பிரதிநிதிகளோ, எங்களுக்கு மாநில அரசு மூலம் தகவல் இல்லை என்கின்றனர். மாநில அரசோ, ‘ஆய்வு நடக்கிறது’ என்பதுடன் நிற்காமல், ‘அவர்கள் வறட்சியின் காரணமாக இறக்கவில்லை’ என்றும் சொல்கிறது. மாநில அரசும் மத்திய அரசும் கண்ணைத் திறந்துகொண்டே தூங்குவதுபோல் நடிக்காமல் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் முன்வர வேண்டும்.

- ஜெ.பிரதாபன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம், தர்மபுரி.



அறிவியியல் படைப்புகளின் தேவை

கவிதை, கதை, புனைவு, அபுனைவு எதுவாயினும் தினசரி வாழ்க்கையிலிருந்து கிள்ளி எடுத்தவற்றுக்குக் கூடுதல் மதிப்பு. எல்லாமும் தொழில்நுட்பம் ஆகிவிட்ட இன்றைய சூழலில், நம் தமிழ் வாசிப்பு உலகத்தில் அறிவியல் கதைகள் மற்றும் கட்டுரைகளின் பங்கு மிகச் சிறிதே. இந்த நிலை மாற வேண்டும். தமிழ் தன்னைத் தானே வளப்படுத்திக்கொள்ள அறிவியல் படைப்புகள் மிகவும் அவசியம்.

- இராஜிசங்கர், மின்னஞ்சல் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x