Published : 11 Jul 2016 02:59 PM
Last Updated : 11 Jul 2016 02:59 PM
ஒரு தந்தையின் இடத்திலிருந்து மகனுக்குச் சொல்லும் அறிவுரைபோல், 'அரசு ஊழியர்கள் பொறுப்பு கூடுதலாகிறது' என்ற ஒரு தலையாய செய்தியைச் சொல்லியிருக்கிறது தலையங்கம்.
அரசு ஊழியர்களின் சம்பளத்தை அரசின் செலவாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில், அரசு மற்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய கடமையை அரசு ஊழியர்கள் பாரமாக நினைக்கக் கூடாது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உற்பத்தியாளர்களும், தங்க நகை விற்பனையாளர்களும் இச்சம்பள உயர்வு குறித்து மகிழலாம்.
ஆனால், மாநில அரசு அலுவலகமாக இருந்தாலும் சரி, மத்திய அரசு அலுவலகமாக இருந்தாலும் சரி, தன் தேவை கருதி உள்நுழையும் ஒரு சாமானியன் சற்று முகச்சுளிப்புடனே வெளியேறுகிறான்.
காரணம், லஞ்சமாகவோ ஊழியரின் மெத்தனமாகவோ இருக்கலாம். அரசு ஊழியர்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய வாசகம் இதுதான்: 'வாடிக்கையாளரே உங்களின் எஜமானர்'!
- டி.சந்தானகிருஷ்ணன், தஞ்சாவூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT