Published : 08 Aug 2016 01:36 PM
Last Updated : 08 Aug 2016 01:36 PM
இளம் குற்றவாளிகளாக ஆகிவிடும் சிறுவர்களைச் சட்டங்களால் மட்டுமே சீர்திருத்த இயலாது. அன்பும் மன்னிப்பும் அவர்கள் திருந்துவதற்கு அவசியமானது என்ற கருத்தை >கார்த்திகேயனின் கட்டுரை ஆழமாகப் பதிவுசெய்கிறது.
மிகப் பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கிய நமது சமூகத்தில், பெற்றோர்களின் நேரிடையான கண்காணிப்பின்மை, மதுவுக்கு அடிமையான பெற்றோர்களின் பொறுப்பின்மை, குழந்தைகளின் கீழ்ப்படியாமை குணம் மற்றும் உளவியல் பிரச்சினைகள் போன்ற காரணிகள் இளம் குற்றவாளிகளை உருவாக்குகிறது.
மேம்படுத்தப்பட்ட உளவியல்ரீதியிலான ஆற்றுப்படுத்துதல், தொடர்சியான மனநல சிகிச்சைகள் வழங்கப்பட்டு, அவர்கள் நல்வழிப்படுத்தப்பட வேண்டும். சீர்நோக்கு இல்லத்திலிருந்து அவர்கள் திரும்பும்போது சமூகத்தில் புறக்கணிக்கப்படாத நிலை வேண்டும்.
- சு.செந்தில்ராஜன், செம்போடை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT