Published : 20 Jan 2016 10:59 AM
Last Updated : 20 Jan 2016 10:59 AM

பெரும் கவலைக்கு இடமில்லை

அம்மாக்கள் அலுவலகம் செல்வதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருப்பது உண்மையாக இருந்தாலும், கவலை கொள்ளுமளவுக்குத் துயரமானதல்ல.

ஏனெனில், குழந்தைகள் சில ஆண்டுகளில் வளர்ந்துவிடுவார்கள். அதன் பிறகு, அவர்களுக்கு அம்மாக்களின் தேவைகள் குறைந்துவிடும்.

வேலை என்பது பொருளாதாரம், திறன் என்பதையெல்லாம் தாண்டி, பெண்ணுக்கு உளவியல்ரீதியான மனவலிமை, மன அழுத்தங்களிலிருந்து விடுபடல், தனக்கான இடத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியக் காரணியாக அமைகிறது. வேலைக்குச் சென்ற என் அன்னையைப் பற்றி நானும் என் உடன்பிறந்தவர்களும் பெருமையாகவே உணர்ந்தோம்.

என் குழந்தைகளும் அப்படித்தான் உணர்கிறார்கள். பணியாற்றுவது பெண்களுக்கு எத்தனை பாதுகாப்பு, தன்னம்பிக்கை என்பதையும் நான் நன்றாகவே அறிவேன். எனவே, அம்மாக்கள் அலுவலகம் செல்லத்தான் வேண்டும்!

- மோனிகா மாறன், வேலூர்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x