Published : 20 Jun 2016 10:20 AM
Last Updated : 20 Jun 2016 10:20 AM

காவிரி நீர் உயிர் நீர்!

நீர் மேலாண்மையில் நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதை >‘மழைக்கு முன் முந்துங்கள்’ கட்டுரை தெளிவாக விளக்கியது.

விவசாய நலனைக் காக்க, வரும் காலங்களில் குறைந்தது தனி நிதி நிலை அறிக்கையையாவது அரசு சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும். ஆழ்குழாய்ப் பாசனம் மட்டுமே மாற்று என்னும் மாயப் போக்கை மாற்ற அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

காவிரி நீர் எட்டாக் கனியாகிவிடுமோ என்ற அச்சம் நாளுக்கு நாள் பெருகிவரும் சூழலில், கடலுக்குள் வீணாகக் கலக்கும் ஆற்று நீரைச் சேமிக்கும் விஷயத்தில், அரசு அலட்சியம் காட்டக் கூடாது என்பதே விவசாயிகளின் கோரிக்கை!

- இரா.முத்துக்குமரன், குருங்குளம் மேல்பாதி.

***

இன்னும் இருக்கலாம்

‘பிரபஞ்சத்தின் மிகப் பெரிய கிரகம் கண்டுபிடிப்பு: 2 சூரியன்களைச் சுற்றிவருவதாக நாசா விஞ்ஞானிகள் தகவல்’ செய்தி படித்தேன்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் அது பெரியது என்பதே சரி. முடிவில்லாத, எல்லையே இல்லாத பிரபஞ்சத்தில் இன்னும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ பெரிய கிரகங்கள் இருக்கலாம் அல்லவா?

- ராம், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x