Published : 04 Aug 2016 04:53 PM
Last Updated : 04 Aug 2016 04:53 PM
ராமசந்திர குஹா எழுதிய ‘தற்புகழ்ச்சியின் மறுவடிவம் மோடி’ கட்டுரை படித்தேன். புகழ் பெற்ற வரலாற்றாசிரியரான குஹா சற்று நிதானத்துடன் இக்கட்டுரையை எழுதியிருக்கலாம் என்று தோன்றியது.
மோடி ஆட்சி இப்போதுதான் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஒரு பிரதமராக முனைப்புடன்தான் அவர் செயல்படுகிறார். இன்னும் அவர் ஆற்ற வேண்டிய பணிகளும், ஆட்சிக் காலமும் மிச்சம் இருக்கின்றன.
அப்படியான சூழலில், இவ்வளவு கடுமையான வார்த்தைகளில் அவரை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதுவது வருத்தம் தருகிறது. ‘தற்புகழ்ச்சியின் மறுவடிவம்’ என்று அவரைக் குறிப்பிட்டிருப்பதும் ஏற்கத் தக்கதல்ல!
- ஆர்.முருகன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT