Published : 26 Sep 2016 09:57 AM
Last Updated : 26 Sep 2016 09:57 AM
இந்தியாவின் ஏற்றுமதியில் கிடைக்கும் அந்நியச் செலாவணியில், மூன்றில் ஒரு பங்கு தமிழகத்திலிருந்துதான் என்பதால், இதற்கு மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டுக்குத் தரும் மறுபயன் என்ன என்று ‘தமிழகம் அடையும் பயன் என்ன?’ என்ற கட்டுரையில் கேட்கப்பட்டிருக்கும் கேள்வி யோசிக்கக்கூடிய விஷயம்தான். அதேசமயம், அண்டை மாநிலங்களின் நீர்மேலாண்மையோடு தமிழகத்தின் நீர்மேலாண்மையை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? எவ்வளவு மழை பெய்தாலும் அதைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டு, வறட்சிக் காலத்தில் அதை வைத்து அரசியல் நடத்துவது எந்த வகையில் நியாயம்? மற்ற மாநிலங்கள் தடுப்பணை கட்டுவது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதும் நாம், நமது மாநிலத்திலுள்ள அணைகளையும் நீர்நிலைகளையும் பராமரிக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம்?
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
புத்தகமே வரம்
வெறும் செய்திகளை மட்டும் கொடுக்காமல், வாசகர்களைச் சிந்திக்கச் செய்யவும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் உந்துசக்தியாகவும் ‘தி இந்து’ திகழ்கிறது. நூல்வெளி பகுதியில் இடம்பெறும் நூல்களைத் தேடிப்பிடித்து வாங்கச் செய்யும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. வாழும் மனிதர்களுக்கும் வரும் தலைமுறைக்கும் வரமாக இருப்பது புத்தகங்கள் மட்டுமே. அதற்கான சிறப்புப் பக்கங்களை ஒதுக்கியதற்கு நன்றி!
- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT