Published : 14 Oct 2014 10:17 AM
Last Updated : 14 Oct 2014 10:17 AM
‘மெல்லத் தமிழன் இனி…’ தொடர் கட்டுரையைப் படித்தேன். என் தந்தையும் பாழாய்ப்போன குடிக்கு அடிமையானதால்தான் இறந்தார். ஆனால், அவர் நல்லவர். அவருக்கும் இதைப் போலத்தான் ‘திருடன் வரான், மாடு போகுது’ என்று ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்தோம். சிறிது காலம் நன்றாக இருந்தார். மறுபடியும் அதே பிரச்சினை. மாத்திரை சாப்பிட்டால் நன்றாக இருப்பார். இல்லையெனில், எங்காவது ஓடுவார், ஏதாவது பினாத்திக்கொண்டிருப்பார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தூக்கில் தொங்கி இறந்தார். இப்போதும் அவரைப் பற்றிய நினைவுகள் வந்தாலே கண்ணீர் வருகிறது. தயவுசெய்து யாரும் குடிக்க வேண்டாம் நண்பர்களே!
சரண்,‘தி இந்து’ இணையதளம் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT