Published : 24 Jun 2016 09:46 AM
Last Updated : 24 Jun 2016 09:46 AM

கலக்கல் கார்ட்டூன்

சர்வதேச யோகா தினம் மூலம், மோடியின் பிம்பம் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது.

தேசம் சந்தித்துவரும் எண்ணற்ற பிரச்சினை களை மறக்கவும், மடைமாற்றம் செய்யவும் யோகா தினம் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனைச் சொல்லாமல் சொன்ன 22.6.16-ம் தேதி வாசகர் கார்ட்டூன் அருமை. மத்திய அரசு நீண்டகாலம் மக்களை ஏமாற்ற முடியாது.

- பெரணமல்லூர் சேகரன், சென்னை.

*

பள்ளிகளில் யோகா

இந்திய மண்ணில் பிறந்து, இன்று உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள யோகாவைப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒருநாளாவது சொல்லிக்கொடுக்க வேண்டும். இதனால், மாணவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதுடன், உடல் நலமும் மேம்படும்.

எதிர்கால இந்தியாவின் மருத்துவச் செலவுகளும் குறையும். மாணவர் களின் மன நிலையும் பக்குவப்படும். ஆதலால் பள்ளிகளில் யோகாவைக் கட்டாயமாகப் பயிற்றுவிக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x