Published : 15 Oct 2014 10:23 AM
Last Updated : 15 Oct 2014 10:23 AM

அரசு கட்டுப்படுத்தட்டும்

மாற்றம் ஒன்றுதான் வாழ்வில் மாறாதது. ஆன்லைன் வர்த்தகம் அசுர வளர்ச்சியடைவதைத் தடுக்க முடியாது; கட்டுப்படுத்த முடியும். குறைந்த விலையில் எங்கு பொருட்கள் கிடைக்கின்றனவோ அங்குதானே மக்கள் வாங்குவார்கள். அதுதானே நியதியும்கூட. மற்ற வர்த்தகர்களும் குறைந்த லாபத்தில் பொருட்களை விற்றால் இந்த வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும். மத்திய-மாநில அரசுகள் புதிய சட்டங்கள் இயற்றி, சிறுகுறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் நலிவடையாமல் பார்த்துக்கொள்வதுதான் எதிர்காலத்துக்கு நல்லது.

ரேவதிப்ரியன்,ஈரோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x