Published : 16 Oct 2014 10:34 AM
Last Updated : 16 Oct 2014 10:34 AM

பெண்கள் மண வயது 21- வரவேற்க வேண்டிய சட்டம்

‘தளைகள் அறுபட வேண்டும்’ தலையங்கம் கண்டேன்.பெண்களின கல்வி வேலைவாய்ப்பு, சுதந்திரம் போன்ற முன்னேற்றத்துக்குப் பெரும் தடைக்கல்லாக இருந்தது திருமணம் என்னும் சடங்கு. பூப்பெய்ததுமே ‘இன்னொருவர் வீட்டில் வாழப் போகிறவள்தானே; எப்படியாவது பெண்ணுக்குத் திருமணம் செய்துவைத்தால்தான் நிம்மதி’ என்ற மனநிலைக்குப் பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இதனால் பெண்களின் கல்விக்கான உரிமைகள் மறுக்கப்படுவதோடு, அவர்களது உணர்வுகளும் புறந்தள்ளப்படுகிறது. இந்த உண்மை நிலையை உரக்கச் சொல்லியது தலையங்கம். காதல் என்கிற பேரில் பெண்கள் இளம் வயதிலேயே வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் சம்பவங்களையும் நாம் பார்க்கிறோம். எனவே, இன்றைய காலகட்டத்தில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதை நிச்சயம் வரவேற்கலாம். இதன் மூலம் சட்டரீதியில் பாதுகாப்பு கிடைக்க வழி ஏற்படுவதோடு, பிரசவ காலங்களில் ஏற்படும் இறப்புகளையும் தடுக்க முடியும்.

- மு.க. இப்ராஹிம்,வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x