Published : 22 Jun 2016 11:19 AM
Last Updated : 22 Jun 2016 11:19 AM
ரிசர்வ் வங்கிக்கு இதுவரை எத்தனையோ ஆளுநர்கள் வந்தார்கள், சென்றார்கள். ராஜனின் பெயர் மட்டும் மனதில் நிற்கக் காரணம், அவரின் செயல்பாடே.
ராஜன் வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை, வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பதெல்லாம் அவரை விலக்குவதற்காக உருவாக்கப்படும் பாசாங்கான காரணங்களே.
பெருங்கடனாளிகள் என்னும் தேசத்தின் மிகப் பிரம்மாண்டமான வலைக்குள் அவர் கைவிட்டார். அதன் விளைவாக அங்கிருந்த ஒரு விஷ ஜந்துவின் நச்சுப்பல் பாய்கிறது. நஷ்டம் ராஜனுக்கல்ல; இந்தியாவுக்கு.
சாதாரணர்கள் ரகுராம் ராஜனின் முக்கியத்துவத்தை உணர்ந்த அளவுக்கு, இந்தியா உணர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை. என்ன ஒன்று.. சிகாகோ பல்கலைக்கழகத்துக்கு ஆகச் சிறந்த ஒரு பொருளாதார நிபுணர் மீண்டும் கிடைத்திருக்கிறார்.
- சந்தானகிருஷ்ணன், தஞ்சாவூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT