Published : 05 Sep 2016 08:49 AM
Last Updated : 05 Sep 2016 08:49 AM
மு.சிவலிங்கத்தின் ‘மைதானத்தைத் திறந்துவிடுங்கள்’ கட்டுரை பலருடைய எண்ணக் கலவை. பெரும் பாலான பள்ளிகளில் வாரத்துக்கு ஒரு விளையாட்டு வகுப்புதான் உண்டு. அன்றைக்கு எந்த மாணவனும் விடுப்பு எடுக்க மாட்டான். அதுவரை வகுப்புக்கு வராத மாணவர்கள்கூட அன்று தவறாது ஆஜராகி, சும்மா பட்டாம்பூச்சிகளாகப் பறந்துகொண்டி ருப்பார்கள்.
விளையாட்டின் மீதுள்ள ஆர்வம் காரணமாகத் தனக்குப் பிறந்த நாள் டிரஸ்கூட வேண்டாம், ஹாக்கி மட்டை போதும் என அடம்பிடித்த மாணவனும் உண்டு. கிரிக்கெட் பந்து வாங்குவதற்கென்றே எந்தச் செலவும் செய்யாமல் காசு சேமித்து வைக்கும் தியாகிகளும் இருக்கிறார்கள். விளையாட்டுக்காக எதையும் செய்யத் துணியும் மாணவர்களின் இந்த அளப்பரிய ஆர்வத்தை உணர்ந்து, அவர்களுக்கு வழிகாட்டினாலே போதும். பதக்கங்கள் நம்மிடையே பவனி வரும்!
ஜே.லூர்து, மதுரை.
நதிநீர் இணைப்புக்கு இதுவே சமயம்
பொறியாளர் ஏ.சி.காமராஜ் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நதிநீர் இணைப்புத் திட்டத்தை வலியுறுத்திவருகிறார். தற்போது தென் மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் போன்ற மாநிலங்கள்கூட இதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றன. தமிழக அரசு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி காலம் கடத்தாமல் இத்திட்டத்தைச் செயல்படுத்தினால், தற்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டை மட்டுமின்றி, வருங்கால வறட்சியையும் தடுக்கலாம். குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைப்பதுடன், புதிய போக்குவரத்து வசதியும் கிடைக்கும் செய்வார்களா?
- அ.பட்டவராயன், திருச்செந்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT