Published : 04 Jul 2016 12:33 PM
Last Updated : 04 Jul 2016 12:33 PM
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கு.ராமசாமியின், >'தமிழகத்தில் விவசாயச் சாகுபடி 12 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது' எனும் கவலையை 'தி இந்து' நாளிதழ் வழியாக அறிந்தேன்.
விவசாய வருமானத்துக்கு மத்திய அரசு முழு வரிவிலக்கு அளிக்கிறது. சில மாநில அரசுகள் மின்கட்டணச் சலுகையும் அளிக்கின்றன. இருப்பினும், தமிழகத்தில் விவசாயத் தொழில் சுருங்கி வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. வேலை ஆட்கள் பற்றாக்குறை, மின்பற்றாக்குறை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்காமை போன்றவை வேளாண் தொழிலுக்கு எதிரிகளாக உள்ளன.
விவசாயத் தொழிலைக் காக்க வேண்டுமானால், படித்தவர்கள் மிகப் பெரிய அளவில் விவசாயத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். அதனால், தங்களின் அறிவுத் திறன் மூலமும் அறிவியல் உதவியுடனும் விவசாயத்தை மிகப் பெரிய அளவில் அவர்களால் கொண்டு செல்ல முடியும்.
- எம்.ஆர்.லட்சுமிநாராயணன், ராசிபுரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT