Published : 16 Jun 2016 10:50 AM
Last Updated : 16 Jun 2016 10:50 AM

இந்தியர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்

இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த இந்திய வம்சாவளித் தமிழர்களும் மற்றைய இலங்கைத் தமிழர்களுடன் சேர்ந்து தமிழகத்தின் அகதிகள் முகாம்களில் பல ஆண்டுகளாக வாழ்கின்றனர். அவர்களின் பூர்வீகம் தமிழகமே. மீண்டும் இலங்கை செல்லும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

சுமார் 30 ஆண்டுகளாக தமிழகத்தில் இவர்களின் பிள்ளைகள் பல்வேறு துறைகளில் நன்கு படித்திருந்தும், அரசு வேலை பெறுவதிலும் அரசு சலுகைகள் பெறுவதிலும் சிரமங்கள் இருந்துவருகின்றன.

தங்களை இந்தியர்களாக ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தும் சொந்த நாட்டிலேயே இன்னமும் அகதிகளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். பல முறை கோரிக்கைகள் வைத்தும் பயனில்லை.

இந்த இந்திய வம்சாவளித் தமிழ் அகதிகள் அனைவரையும் இந்தியக் குடிமக்களாக அங்கீகரித்து, இந்திய தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டியது இந்திய அரசின் கடமை.

- மா.சந்திரசேகரன்,பொதுச் செயலாளர், மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம், கோத்தகிரி.

*

வாழ்க சுவீடன்

கண்களை ஈரமாக்கிவிட்டது, >'அகதிக் குழந்தைகள் படும்பாடு' கட்டுரை. கல் மனம் படைத்த தீவிரவாதிகளின் இலக்கு 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் எனும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.

கல்வி பயில வேண்டிய வயதில், குடும்பத்தைவிட்டுப் பிரிவதும், தீவிரவாத இயக்கத்தில் சேரக் குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவதும், எல்லாவற்றுக்கும் உச்சபட்சமாகப் பாலியல் வன்புணர்வுக்குப் பலியாவதும் வேதனை.

உயிருக்குப் பயந்து அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறும்போது அவர்கள் சந்திக்கும் சவால்கள் அதைவிடக் கொடுமை. சுவீடன் என்ற நாடு மட்டும் இல்லை என்றால், அவர்கள் நிலை இன்னும் மிக மோசமாக இருந்திருக்கும்.

- இரா.முத்துக்குமரன்,குருங்குளம் மேல்பாதி, தஞ்சை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x