Published : 07 Jul 2016 01:02 PM
Last Updated : 07 Jul 2016 01:02 PM

பாராட்ட வேண்டிய பணி

பெரம்பலூர் மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுவரும் 'பொது நீர் அமைப்பின'ரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. உயிராதாரமான நீர்நிலைகளை மீட்டெடுப்பதில் அரசு அக்கறை காட்டவில்லை என்றாலும், இந்த அமைப்பினர் அந்தந்தப் பகுதி மக்களின் துணையோடு தூர்ந்துபோன பொதுக் கிணறுகள், குளம் ஆகியவற்றைப் புனரமைத்துவருவது அரசால் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இப்போது 10 கி.மீ. நீளமுள்ள ஜார்ஜ் வாய்க்காலை மீட்டெடுக்கத் திட்டமிட்டுள்ள அவர்களுக்கு, அந்த மாவட்ட ஆட்சியர் அரசு மூலம் வேண்டிய உதவிகளைப் பெற்றுத் தந்தால், அமைப்பினரின் பணிகளும் எளிதாக முடியும். தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இதேபோல நீர்நிலைகளை மீட்டெடுக்க மக்களுக்கும் உத்வேகம் பிறக்கும்.

- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x