Published : 25 Jul 2016 01:03 PM
Last Updated : 25 Jul 2016 01:03 PM

நகை முரண்

முன்னாள் நீதிபதி சந்துருவின் 'உறங்கவிடாத மத்திய அரசு' கட்டுரை, நாட்டில் தற்போது தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், அவர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களையும் அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

பெருநிறுவனங்களுக்குச் சாதகமாக தொழிலாளர் நலச் சட்டங்கள் பலவற்றை மத்திய அரசு திருத்திவருவது கவலையளிக்கும் போக்கு. ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள் போன்றவை 24 மணி நேரமும் செயல்பட, புதிய சட்டம் கொண்டுவருவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அரசுக்கு தொழிலாளர் நலனில் எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று. தொழிலாளர்களைப் புறந்தள்ளிவிட்டு, ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்குத் திட்டமிடுவது, நகை முரண்.

- ஜா.அனந்த பத்மநாபன், திருச்சி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x