Published : 01 Aug 2016 12:58 PM
Last Updated : 01 Aug 2016 12:58 PM
அரசு ஊழியர்களின் பணிக் கலாச்சாரம் கெட்டுவிட்டது. ஒரு ஓய்வூதியன் என்ற முறையில், அரசு அலுவலகங்களில் எழுதப்படாத ஒரு விதிமுறையை நான் பார்த்திருக்கிறேன். 'வேலை செய்கிறவனுக்குத் தொடர்ந்து வேலை கொடு, வேலை செய்யாதவனுக்கு ஊதிய உயர்வு கொடு' என்பதுதான் அது.
இந்த சித்தாந்தத்தை முறியடிக்கும் வகையில், சிறப்பாகச் செயல்படாத அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு கொடுக்கக் கூடாது என்று 7-வது ஊதியக் குழு பரிந்துரைத்திருப்பதை வரவேற்கிறேன்.
அதே நேரத்தில், அதிகாரவர்க்கத்தின் சர்வாதிகாரப் போக்கால் நியாயமான ஊழியர்கள், தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் போன்றோர் பாதிப்புக்கு உள்ளாகிவிடாமலும், பாரபட்சமின்றி இதனை நடைமுறைப் படுத்த தேவையான வழிமுறைகளைச் செயல்படுத்துவதும் அவசியம்.
- அ.பட்டவராயன், திருச்செந்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT