Published : 16 Mar 2018 09:53 AM
Last Updated : 16 Mar 2018 09:53 AM

இப்படிக்கு இவர்கள்: மணலை நேரடியாக அரசே விற்றால் என்ன?

மணலை நேரடியாக அரசே விற்றால் என்ன?

மிழகத்தில் ஆற்றுமணல் விலை உயர்கிறது. ஆற்றில் மணல் எடுத்து, கிடங்கில் இருப்பு வைத்து விற்பதற்கான செலவு அதிகரிப்பால், அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ளபடி ஒரு யூனிட் மணல் விலை ரூ.400. ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி. இப்போதைய அரசு விலைப்படி ஒரு லாரி லோடு மணல் விலை ஜிஎஸ்டி சேர்த்து ரூ.840தான். ஆனால், சந்தையில் ஒரு லாரி லோடு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.22 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அரசு நிர்ணயம் செய்கிற விலையைவிட 20 மடங்கு இது. அரசு விலையுடன் லாரி வாடகையைச் சேர்த்தால் வருகின்ற தொகையைவிட அதிகமாகச் சந்தையில் வாங்கும் பணம், யாரிடம் சேர்கிறது? பொருளாதார நலம் காக்கவேண்டிய அரசாங்கம் இதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? மதுபானம், அம்மா குடிநீர், மருந்து, சிமென்ட் விற்பதைப் போல மணலையும் விற்றால் என்ன?

- நசீர், வலங்கைமான், மின்னஞ்சல் வழியாக.

மரணம் தந்த படிப்பினை

‘அ

ன்பு’ மனத்துள் இருந்தும், கண்டிப்பான தந்தை விதிக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை ஒரு மகன் சகியாமல், முரண்பட்டு எவ்வாறு காலத்தின் போக்கில் கருத்து மோதல்களை வளர்த்து, தன்னைத்தானே சீரழித்து மரணிக்கிறான் என்பதை, மகாத்மாவின் தலைமகன் ஹரிலால் மரணம் குறித்து ‘மரணம் ஒரு கலை’ கட்டுரையில் அ.வெண்ணிலா விவரித்து, விளங்கவைத்த பாசப் போராட்ட நிகழ்வுகள் மனதை நெருடச்செய்தன. ஒளியும் நிழலுமாக இவர்கள் வாழ்ந்து மறைந்தாலும், பல குடும்பங்களுக்கு இன்றும் இது படிப்பினையாகும்.

- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.

இருவழிப் பாதையில்

நத்தை வேக வளர்ச்சி

‘செ

ன்னை - மதுரை இருவழிப் பாதை தயார்’ என்ற செய்தி தென்மாவட்ட மக்களுக்கு ஆறுதலாக உள்ளது. இதில் பெரிய வருத்தம் என்னவெனில், விழுப்புரம் -திண்டுக்கல்லுக்கு இடையேயான 281 கி.மீ. தூரம் இருவழிப் பாதையாக்க 2011தொடங்கி 2018 வரை 7 ஆண்டுகள் பிடித்துள்ளன. ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு வேகம்தான் அந்நாட்டின் வளர்ச்சி வேகத்தைத் தீர்மானிக்கும். இந்த வேகம் இப்போதைய தேவைக்கு ஏற்புடையதல்ல. இந்த விஷயத் தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரிய கவனம் செலுத்தவில்லை. இனிவரும் காலங்களில் எஞ்சியுள்ள மதுரை - கன்னியாகுமரி இருவழிப் பாதையாக்குதல்களில் மாநில அரசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதிய அழுத்தம் கொடுத்து விரைவுபடுத்துவது அவர்களது கடமை. பொதுமக்களும், பிற அமைப்புகளும் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும்.

-அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

இறந்தவர், இருப்பவர்

தோல்தானம் தரலாம்

கு

ரங்கணி காட்டுத் தீயில் சிக்கி, பலர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தீக்காயச் சிகிச்சையில் தோல் தானத்தின் அவசியம் முக்கியத்துவம் பெறுகிறது. கண் தானம், ரத்த தானம் போன்று தோல் தானம் பிரபலம் ஆகவில்லை. இறந்தவர்களிடமிருந்து தோல் தானம் பெறுவது மட்டுமின்றி, உயிரோடு இருப்பவர்களும் தோல் தானம் செய்யலாம். தோல்தான் நமது உடலின் பெரிய உறுப்பு. செல்களில் உள்ள நீர் இழப்பு ஏற்படாமலும், தீமை செய்யும் பாக்டீரியாக்களும் வைரஸ்களும் உடலினுள் நுழையாதவாறும் தோல் பாதுகாக் கிறது. உடலின் வெப்பநிலையையும் தோல் நிர்வகிக் கிறது. அதிகமான தோல் இழக்கப்பட்டால் ரத்தம் நஞ்சாவதுடன் சிறுநீரக செயலிழப்பும் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படு கிறது. இந்நிலை ஏற்படாமல் ஒட்டுத்தோல் பாதுகாக்கிறது. தோல் தானத்தின் அவசியம் குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் அளித்த பேட்டியை (மார்ச்15) வெளியிட்ட ‘தி இந்து’வுக்கு நன்றி.

-ஜி.அழகிரிசாமி, சுகாதாரக் கல்வியாளர், செம்பனார்கோயில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x