Published : 19 Mar 2018 09:01 AM
Last Updated : 19 Mar 2018 09:01 AM

இப்படிக்கு இவர்கள்: ஸ்டீவன் ஹாக்கிங்கின் மற்றொரு பரிமாணம்!

ஸ்டீவன் ஹாக்கிங்கின் மற்றொரு பரிமாணம்!

ஸ்

டீவன் ஹாக்கிங் பற்றிய ‘தி நியூயார்க் டைம்ஸ்’ கட்டுரையிலும் (ஆசையின் தமிழாக்கம்) நலங்கிள்ளியின் கட்டுரையிலும் (தி இந்து 15, 16 மார்ச்) நவீன அறிவியலுக்கு அவர் வழங்கியுள்ள மாபெரும் கொடைகள் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. ஆனால், சமூக ஆர்வலராக இருந்த அந்த மேதையின் மற்றொரு பரிமாணத்தையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஐன்ஸ்டீனைப் போலவே அவரும் சோஷலிசக் கருத்துகளைக் கொண்டிருந்தவர். ஏகாதிபத்தியப் போர்களையும் ஆக்கிரமிப்புகளையும் கண்டனம்செய்தவர். 1960-களில் அமெரிக்காவின் வியட்நாம் போருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். ஆப்கானிஸ்தான், இராக் ஆகியவற்றின் மீது நடந்துகொண்டிருக்கும் போர்களை, பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை இடைவிடாது கண்டனம் செய்துகொண்டிருந்தார். நவீன தொழில்நுட்பம், இயந்திரங்கள் ஆகியன தனியார் கைகளில் குவிக்கப்பட்டிருப்பதால், அவற்றை மக்கள் மலிவாகவோ, இலவசமாகவோ பயன்படுத்த முடியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிவந்தார். மத அடிப் படைவாதத்துக்கு மட்டுமல்ல.. மதம், கடவுள் என்ற கருத்துகளுக்குமே எதிரானவராக இருந்தார். பேரண்டத்தில் உள்ள ஒரு தூசியாக மட்டுமே நமது புவிக்கோள் இருந்தாலும், அப்பேரண்டம் முழு வதையும் அறிந்துகொள்வதற்கான ஆற்றலும் தேடலும் மனிதனுக்கு உள்ளது என்று கூறினார். அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கான மகத்தான ஆதர்சமாகத் திகழ்ந்திருக்கிறார்.

- எஸ்.வி.ராஜதுரை, எழுத்தாளர்.

வங்கிகளின் மீதுள்ள

நம்பிக்கை குறையும்!

ங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தாமல் வெளிநாடு சென்றவர்களின் சொத்துக்களைப் பறிமுதல்செய்ய மத்திய அரசு மசோதா ஒன்றினைத் தயார் செய்துள்ளது. கடனைத் திரும்பச் செலுத்தாமல் வெளிநாடு சென்றவர்கள், இங்கேயே இருப்பவர்கள் அனைவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய விரைவில் சட்டம் இயற்றப்பட்டு, உறுதியாக, பாரபட்சமின்றி அச்சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், மக்களுக்கு வங்கிகளின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து பொருளாதாரச் சீரழிவுக்கு வழிவகுக்கும்.

- கா.ஷாஹுல் ஹமீது, உத்தமபாளையம்.

கவலை தீர்ந்தது

மா

ர்ச் 16 அன்று வெளியான ‘உ.பி. - பிஹார்: பாஜகவுக்கு எதிராகப் புதிய அலை’ என்கிற தலையங்கம் வாசித்தேன். உ.பி. முதல்வர், துணை முதல்வர் தொகுதிகள் பாஜகவிடமிருந்து கைமாறியதற்கு முக்கியக் காரணம், அகிலேஷ் - மாயாவதி கூட்டணி மட்டுமல்ல, பாஜக மீதான உ.பி. மக்களின் அதிருப்தியும் காரணம். பிஹாரில் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் நிதீஷ் -லாலு கூட்டணி பாஜகவை வீழ்த்தியது. ஆனால், ஆட்சி அதிகாரத்துக்காக நேரெதிர் சந்தர்ப்ப நிலை எடுத்த நிதீஷ்குமாருக்கு, பிஹார் மக்கள் இந்த இடைத்தேர்தலில் எச்சரிக்கை செய்துள்ளனர்.

- ஆர்.முருகேசன், அந்தியூர்.

அரசின் ‘இணையா’தளம்

மிழக அரசு ‘தமிழ்நாடு மக்கள் இணையதளம்’ என்ற சேவையைத் தொடங்கும் செய்தியைப் படித்தேன். tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து நகராட்சிகளின் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, சொத்து வரி போன்றவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் இணைய வழி செலுத்தலாம் என்ற செய்தியைப் படித்தேன். என்னுடைய தகவல்களைத் தெரிவித்து, பொள்ளாச்சி நகராட்சியிலுள்ள என் சொத்துவிவரங்களைப் தேடினால் ‘ஒரு விவரமும் இல்லை’ என்றே பதில் வருகிறது. குறைகளைச் சுட்டிக்காட்டிப் பின்னூட்டம் எழுதியதற்கும் பதில் இல்லை. எனவே, இருக்கின்ற இணைய சேவைகளை மேம்படுத்தி, அவற்றை முறையான பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தாலே போதும்.

- வெஸ்ரீதரன், துணை இயக்குநர்,

உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை (ஓய்வு).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x