Published : 22 Mar 2018 09:40 AM
Last Updated : 22 Mar 2018 09:40 AM

இப்படிக்கு இவர்கள்: பெற்றவர்களைப் பராமரிக்க மனமில்லாமல் போனது ஏன்?

பெற்றவர்களைப் பராமரிக்க மனமில்லாமல் போனது ஏன்?

மா

ர்ச் 19-ல் வெளிவந்த நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்காக நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்த பின்பு, நாம் அறிவார்ந்த சமுதாயத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக் கிறோமா என்ற அச்சம் உண்டாகிறது. குழந்தை வளர்ப்பில் கவனமின்மையும் பெரியவர்களையும் பெற்றோர்களையும் பராமரிக்க மனமின்றி முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும், குடும்பச் சமநிலை கெட்டுப்போக முழுமுதல் காரணம். இன்னும் பதிவுசெய்யப்படாத குற்றச்செயல்கள் பல லட்சங்களைத் தாண்டலாம். ஆனால் அறிவார்ந்த சமூகம், ஒழுக்கம் என்பதை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்து தாம் மறந்துவிடுவதே, குழந்தைகள் என்றும் பாராமல் கொடுஞ்செயல் புரியும் நபர்களுக்கு இடமளிக்கிறது. இதனைத் தவிர்க்க பெரியவர்கள் வீட்டில் உரிய அரவணைப்போடு பேணப்பட வேண்டும். அப்போதுதான் தாத்தா - பாட்டியின் அன்பையும் அரவணைப்பையும் பெற்று குழந்தைகளும் பாதுகாப்பாக வளரும். தனி குடும்பம் வாழ்வையும் வளத்தையும் தராது என்பதையே இக்குற்றச்செயல்கள் டிஜிட்டல் இந்தியாவின் மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

- சு.பாலகணேஷ், மாதவன்குறிச்சி.

கேள்வி கேட்கும் முகமா நம்முடையது?

கு

டிநீரில் பிளாஸ்டிக் கலப்பு குறித்த கட்டுரையும் தலையங்கமும் (மார்ச் 21) அதிர்ச்சியூட்டும் தகவல்களைச் சொல்லி எச்சரித்ததுடன், அரசும் மக்களும் என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தன. ஒவ்வொரு பிரச்சினைக்கும் போராடித்தான் அதை அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல முடியும் என்ற நிலையே அரசுக்கு அவமானம் இல்லையா? போராடும் மனநிலையிலிருந்து மக்களும் நீர்த்துப்போயிருப்பதே இன்றைய பேரவலம். 80 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் ஒவ்வொரு ஆண்டும் கடலில் கலக்கிறது என்ற பேரபாயத்தைப் படித்தவுடன் மனம் பதறு கிறது. ஆனால், அன்றாடம் காய்கறிகள் வாங்க மளிகைக் கடைகளுக்கு வரும் மக்கள், குறிப்பாக படித்தவர்கள்கூட பிளாஸ்டிக் கவரில் பொருட்களைப் பெற்றுச் செல்வதும், கால் லிட்டர் பால் பாக்கெட்டுக்குக்கூட கவர் வேண்டும் என்று சண்டையிடுவது மான மனநிலையில் உள்ள மக்கள், அரசுகளை மட்டும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு.. எப்படிக் கேள்வி கேட்க முடியும்.. நிர்ப்பந்திக்க முடியும்? இத்தனைக்கும் பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து அறியாதவர்கள் மிகச் சிலரே! பிளாஸ்டிக் பயன்பாடு அபாய அளவைத் தாண்டி விடுமோ என்ற அச்சம் ஒருபுறம்... மறுபுறம் அபாயத்தின் அளவைக் கண்டுகொள்ளாத மனங்கள். தீர்வுகள் தெரிந்தும் தீமையை அனுபவிக்கும் கட்டத்தில் வாழ்ந்துவருகிறோம்.

- என்.மணி,

ஈரோடு.

ங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பிளாஸ்டிக், மண்ணில் தஞ்சமடைந்து குடிநீரிலும் நமது உடலிலும் கலந்துவிடுகிறது. இதனால் புதி ரான பல நோய்கள் உருவாகின்றன. தண்ணீ ரில் மட்டுமின்றி, அந்தத் தண்ணீரில் உயிர்வாழும் தாவரங்களிலும் மீன், கால்நடைகள் போன்றவற்றிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருக்க வாய்ப்புண்டு. முன்பு அதிக அளவு பயன்படுத்தப்பட்ட டி.டி.டி. பவுடர் தாய்ப்பால் வரை காணப்பட்டது. இதற்குத் தற்காலிகத் தீர்வாக குழாய்நீர் அருந்துவதே சிறந்தது என்ற அறிவியலாளரின் கருத்து ஏற்புடையது. மிகச்சிறந்த குடிநீர் என்பது, வடிகட்டிய குழாய்நீரைக் கொதிக்கவைத்து ஆறவைத்த நீர்தான்.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

திராவிட நாடு கோரிக்கை?

தி

ராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டாலும், மாநில சுயாட்சி கையில் எடுக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு, தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் புறக்கணிக்கவேசெய்கின்றன. கோ.ஒளிவண்ணன் திராவிட நாடு ஏன் எழுந்தது.. ஏன் கைவிடப்பட்டது என்னும் கட்டுரையில், கைவிடப்பட்டதற்கான காரணங்களைத் தெரிவித்தாலும், மத்திய அரசிடமிருந்து உரிமைகளை மீட்க திராவிட நாடு கோரிக்கை தேவைப்படுகிறது என்கிறார்.

- பொன்.குமார், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x