Published : 02 Mar 2018 09:33 AM
Last Updated : 02 Mar 2018 09:33 AM

இப்படிக்கு இவர்கள்: சிறப்பு தினங்கள் உயிர்பெறட்டும்!

சிறப்பு தினங்கள் உயிர்பெறட்டும்!

மா

ர்ச் 1-ல் வெளியான 'பாகுபாடுகளை ஒழிப்பதில் உண்மையாகவே அக்கறை காட்டப்படுகிறதா?' என்ற கட்டுரை வாசித்தேன். இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதி, ஆணாதிக்கம், மலம் சுமக்கும் பெண்கள் நிலை, சிறுபான்மை மக்கள், மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் சமமற்ற வாழ்க்கைச் சூழல் ஆகியவை இந்தக் கட்டுரையில் விரிவாக அலசப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற விழிப்புணர்வு தின நாட்கள் மூலம் நோய்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் சமநிலையற்ற மனித சமூக அவலங்கள் குறித்தவற்றில் பாகுபாடுகள் குறையவில்லை. அதிகாரத்துக்கு வருவோர் இவற்றைக் களைய மனமில்லாதவர்களாகவே உள்ளனர். மக்களிடம் உளப்பூர்வமான மாற்றங்கள் நிகழ என்ன வழிகள் என்று அரசும் மக்களும் சிந்தித்துக் களம் கண்டால் சிறப்பு தினங்கள் உயிர்பெறும்.

- ஆர்.முருகேசன், அந்தியூர்.

மரணத்தை மாண்புறச் செய்தவர் சே

வி

யாழன் வரலாறு பகுதியில் புதிதாகத் தொடங்கியிருக்கும் ‘மரணம் ஒரு கலை' எனும் அ.வெண்ணிலாவின் தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆரம்பக் கட்டுரையே அசத்தல். தெரிந்த விஷயங்களாக இருந்தாலும் இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் மிக நேர்த்தியாக, சுவைபடத் தந்திருக்கிறார். ‘தான் மாற்ற விரும்புவது உலகத்தை அல்ல, உலகத்தின் எதிர்காலத்தை' என கனவு கண்ட உன்னத மனிதன் சே குவேரா. அவரது வாழ்க்கை பற்றிய குறிப்புகளுடன் தொடர் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.

அரசின் பொறுப்பு

சே

லம் அம்மாப்பேட்டை குமரகிரி ஏரியை ஆக்கிரமித்துப் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை ஒளிப்படம் காண்பவர் மனதை நிச்சயம் கலங்கச் செய்யும். அந்தப் பகுதியின் செல்வந்தர்கள் நிதி கொடுத்து ஆகாயத் தாமரைகளை அகற்ற உதவலாம். அவ்வளவு தண்ணீரும், அங்கு உயிர் வாழும் உயிரினங்களும் அந்தச் செடிகளால் அழிவதைத் தடுக்கலாம். அதேசமயம், இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தனது கடமை என்பதை அரசு மறந்துவிடக் கூடாது.

- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).

மக்களைக் காப்பது

அரசுத் துறையா, தனியாரா?

நா

ட்டின் முதுகெலும்பாக இருப்பவை அரசுத் துறை நிறுவனங்கள்தான். ஆனால் மத்திய அரசோ ‘கார்ப்பரேட்' நிறுவனங்கள் வளர அரசுத் துறை நிறுவனங்களை ஒழிக்கத் துடிக்கிறது. சென்னையில் வரலாறு காணாத வெள்ளம் வந்த போது பிஎஸ்என்எல் தான் ஆபத்சகாயனாக விளங்கியது. மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயலிழந்தன. இப்போது ‘ஏர்செல்’ சேவை திடீரென ரத்தானது. காரணம் அறியாமல் வாடிக்கையாளர்கள் தவித்தனர். மீண்டும் சேவை வழங்கிய ஏர்செல், முடங்கும் அபாயம் உள்ளதாக இப்போது எச்சரிக்கிறது. அரசுத் துறை நிறுவனம் இதுபோல் செயல்பட முடியுமா?

- ராஜஇந்திரன், காரைக்கால்.

கீழடி ஆய்வுகளின் முக்கியத்துவம்

ழுத்தாளர் சு. வெங்கடேசனின் முயற்சியில் வெளி வந்துள்ள முக்கியத் தொகுப்பு ‘வைகை நதி நாகரிகம்- கீழடி குறித்த பதிவுகள்'. இதை புதன் பொக்கிஷத்தில் எழுதியுள்ளார் பிரபஞ்சன். இவ்வாறான ஆய்வுகள் தமிழகத்தில் நடப்பதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கட்டுரையின் தலைப்பிலேயே கோபத்தையும் தொகுப்பு குறித்த தன் கருத்தையும் அழகாகத் தெரிவித்துவிட்டார்.

- பொன். குமார், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x